ரண் மாவத் - உள்ளங்களை இணைத்தல்

2019-08-17 | செய்தி

ரண் மாவத் - உள்ளங்களை இணைத்தல்

“ரண் மாவத்” என்பது நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற புதிதாக அமுல்படுத்தப்பட்ட பாரிய கருத்திட்டமாகும். கிராமிய வீதிகளை நிர்மாணித்தல், வீதிகளுக்கு காபட் இடுதல், “வீதி வார நிகழ்ச்சித்திட்டம்”, சமய ஸ்தானங்களுக்காக நுழைவு வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் போன்ற 5 வேறுபட்ட வகைகளின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு நாடு பூராகவும் உள்ள வீதிகள் தெரிவு செய்யப்படுகின்றன.

ரண் மாவத் கருத்திட்டத்திற்கென வரவு செலவு திட்டத்தில் மொத்தமாக 16 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமிய சமூகத்தினது வீதி வலையமைப்புகளை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களின் நாளாந்த வாழ்க்கைத்தரங்களை அதிகரித்தல், அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குதல், மக்கள் மத்தியில் பொது உறவுகளை அதிகரித்தல் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். ஒரே நாட்டில் வாழுகின்ற வேறுபட்ட சமயங்களில் இருந்தும் தேசங்களில் இருந்தும் மக்களின் சகவாழ்வினை மேம்படுத்தி மக்களின் இதயங்களை இணைக்கும் என நாம் நம்புகின்றோம்.