தலைப்புச் செய்திகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் காணிகளைச் சுவீகரித்தல்

வீதி அபிவிருத்திக்காக காணிகளைச் சுவீகரித்தல்

காணிகளைச் சுவீகரித்தல் வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களின் அடிப்படைப் பணியாகும். முறையான நெடுஞ்சாலைகள் வலையமைப்பொன்றை, குறிப்பாக இருக்கின்ற பாதைகளை அகலப்படுத்துவதற்கும் வீதிகள், நெடுஞ்சாலைகள், அதிவேகப் பாதைகள் என்பவற்றை அமைப்பதற்குப் பாதையின் இரு புறங்களிலுமுள்ள தனியார் காணிகளைச் சுவீகரிக்க வேண்டியுள்ளது. நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வது என்பது நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.
1950ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரகாரம் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் காணிகள் சுவீகரிக்கப்படுகின்ற அதேநேரத்தில், அது நாட்டின் அபிவிருத்தியில் மிக முக்கியமான செயலாகும்.
வீதி அபிவிருத்திக்காகத் தாமதமின்றி காணிகளைச் சுவீகரிப்பதற்காகப் பொதுமக்களின் ஆகக்கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது எமது நோக்கமாகும். கூவீகரித்துக்கொண்ட காணிகளுக்கு நியாயமான நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதன் மூலம் ஆட்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைத்துக்கொள்வது இதன் முக்கிய செயற்பாடாகும்.

பின்வரும் வீதி அபிவிருத்திக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

சுவீகரிக்கப்பட்ட தமது சொத்துக்களுக்காகச் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை போதாதெனக் கருதுகின்ற நபர்களுக்கு லார்க் மற்றும் சுப்பர்லார்க் குழுக்களுக்கு மேன்முறையீடு செய்வதற்காக அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்துகின்றபோது குறித்த பிரதேச செயலகம் கருத்திட்ட அலுவலகத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

Last Updated on Tuesday, 06 March 2018 07:23  

புதிது என்ன

left direction
right direction