Ministry of Higher Education & Highways

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள் அதிவேகப்பாதை

அதிவேகப் பாதை

இலங்கையில் மிக விரிவான பாதை வலையமைப்பொன்று இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவைகள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டவைகளாக இருக்கின்ற அதேநேரத்தில், அதிகரிக்கும் வாகனங்களின் கொள்ளளவுக்கு வெற்றிகரமாக ஈடுகொடுக்கக்கூடிய நிலையில் அவை இல்லை. அதனால் வளர்ச்சியடைகின்ற போக்குவரத்துத் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் பாதை வலையமைப்பு நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதைத் தடுப்பதற்கும் விரிவானதும் வினைத்திறன் மிக்கதுமான பாதை வலையமைப்பொன்றை மேம்படுத்தவேண்டிய அவசியம் நிலவுகிறது.

கொழும்பு தலைநகரத்தை மையமாகக்கொண்டு நாடளாவிய ரீதியில் விரிவடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உயர்மட்டத்திலான வரையறுக்கப்பட்ட நுழைவுப்பாதை வலையமைப்பின் மூலம் பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள பிரதேசங்களில் உற்பத்தி, சுற்றுலா, கடற்றொழில், விவசாயம் ஆகிய பிரவுகளில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதிவேகப் பாதை வலையமைப்பைக் காட்டும் வரைபடம்

 
தெற்குப் போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

தென்னிலங்கைப் போக்குவரத்துக் கருத்திட்டத்தின் கொட்டாவையிலிருந்து கொடகம வரையிலான பகுதியை அமைத்தல்.

கருத்திட்டத்தின் விபரம்

மேல் மாகாணத்தில் கொட்டாவையிலிருந்து ஆரம்பமாகி தென்மாகாணத்தில் கொடகமையில் முடிவடையும் 126 கி.மீ. கொண்ட தென்னிலங்கை அதிவேகப் பாதையின் இப்பகுதி இலங்கையின் முதலாவது நுழைவுப் பாதைகளைக் கொண்ட அதிவேகப் பாதையாகும். கருத்திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகளான காணிகளை சுவீகரித்தல், மீளக் குடியமர்த்துதல், பொதுவசதிகளை மீளமைத்தல் என்பவை முடிவடைந்ததன் பின்னர் அதன் நிர்மாணப் பணிகள் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகின. 19 மீற்றர் அகலமுள்ள தென்னிலங்கை அதிவேகப்பாதை முக்கியமாக ஒன்று 3.5 மீற்றர் வீதம் ஒரு பக்கத்திற்கு இரு பாதைகளைக்கொண்ட, இருபக்கத்திற்கும் இரண்டு பாதை வழிகளைக் கொண்டுள்ளதும் இருபக்கங்களிலும் 1.75 மீற்றர் அகலமுள்ள அவசரமாக நிறுத்தும் இரண்டு ஓரங்களைக் கொண்டுள்ளதும், 1.5 மீற்றர் அகலமுள்ள மத்திய பிரிப்பையும் கொண்டுள்ளதுமாகும். நிர்மாணப்பணிகள் மிகச் சிக்கலானதாக இருந்த அதேநேரத்தில் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலம் சேற்றுநிலப் பகுதியை மேம்படுத்துதல், மண்வெட்டுதல், மண் நிரப்புதல், மதகுகள், பாலங்கள் ஆகியவற்றை அமைத்தல் மற்றும் இறுதியில் தார்போட்ட மேற்பரப்பை அமைத்தல் என்பவை அதில் உள்ளடங்கியது. இவ்வதிவேகப் பாதை எதிர்காலத்தில் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டைவரை நீடிக்கப்படவிருக்கின்றது.

நிதியுதவி வழங்கல்

பகுதி JICA PKG 1
கொட்டாவையிலிருந்து தொடங்கொட வரை
JICA C PKG 2
தொடங்கொடவிலிருந்து குருந்துகஹதெக்ம வரை
ADB Section
குருந்துகஹதெக்ம
விலிருந்து பின்னதூவ வரை
South Section
பின்னதூவவிலிருந்து மாத்தறை வரையும் காலித் துறைமுகத்தின் நுழைவுப்பாதை
Funding Agency சர்வதேச ஒத்துழைப்பு நிதியம் /  இலங்கை அரசு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜன்சி /  இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கி / இலங்கை அரசு ஏற்றுமதி இறக்குமதி சீனவங்கி / இலங்கை அரசு

கருத்திட்டத்தின் கால எல்லை

பகுதி JICA PKG 1
கொட்டாவையில்
இருந்து தொடங்கொட
JICA C PKG 2
தொடங்கொடவில் இருந்து குருந்துகஹதெக்ம
ADB Section
குருந்துகஹ
தெக்மவில் இருந்து பின்னதூவ
South Section
பின்னதூவவில் இருந்து மாத்தறை வரை காலித் துறைமுகத்துக்குநுழைவுப் பாதை
பூர்த்தி செய்யப்படவிருக்கும் திகதி 2011.10.20 2011.10.20 2011.05.10 2013.04.20

தற்போதைய முன்னேற்றம்

பகுதி JICA PKG 1
கொட்டாவையில்
இருந்து தொடங்கொட
JICA C PKG 2
தொடங்கொடவில் இருந்து குருந்துகஹதெக்ம
ADB Section
குருந்துகஹ
தெக்மவில் இருந்து பின்னதூவ
South Section
பின்னதூவவில் இருந்து மாத்தறை வரை காலித் துறைமுகத்துக்குநுழைவுப் பாதை
பௌதிக முன்னேற்றம் (ஒக்ரோபர்) 99% 99% 100% பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 05%

பயன்கள்

பொருளாதாரம்

  • மொத்தத் தேசிய உற்பத்திக்கு ஒப்பீடாகத் தென்மாகாணத்திலிருந்து அதிக மொத்தத் தேசிய உற்பத்தியைப் பெற்றுக்கொள்தல்.
  • மொத்த ஆண்L பெண் தொழில் இன்மைக்கு ஒப்பீடாகத் தென்மாகாணத்திலிருந்து தொழில் இன்மை வீதத்தைக் குறைத்தல்.
  • மொத்த ஒப்பீட்டு வறுமைக்கு விகிதாசார ரீதியில் தென் மாகாணத்தில்  ஒப்பீட்டு வறுமையைக் குறைத்தல்.

காணிகளின் பெறுமதி

  • அதிவேகப் பாதையின் இருமருங்கிலும் பிரதேசசபை அதிகார பிரதேசங்களில் காணிகளின் வர்த்தகப் பெறுமதி அதிகரித்தல்.

சுற்றுலா

  • தென்னிலங்கைக் கரையோரம் சார்ந்த பிரதேசத்தில் சுற்றுலாத்துறை மேம்பாடடைதல்.
தெற்குப் போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

கருத்திட்டம் - கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதைக் கருத்திட்டம்

கருத்திட்டத்தின் பெயர்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதைக் கருத்திட்டம்

கருத்திட்ட விபரம்

கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரையிலான சுமார் 25.8 கி.மீ. நீளமுள்ள இந்த உத்தேச அதிவேப் பாதையின் ஆரம்ப இடம் புதிய களனிப் பாலமாகும். அது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவுப் பாதையுடன் (கனடா நட்புறவுப் பாதை) முடிவடையும்.

அதிவேகப்பாதை 6 பாதை நிரல்களையும் 4 பிரிவுகளையும் கொண்டதாக இருக்கும். அத்துடன் அகலம் முறையே 33.5 மீற்றர்களையும் 26.0 மீற்றர்களையும் கொண்டிருக்கும். 80 முதல் 100 கி.மீ. வேக வரையறையில் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரையிலான பயண நேரத்தில் 20 நிமிடங்கள் வரை குறைத்துக்கொள்ள முடியும்.

இப்பாதைக்கான உத்தேச இடைப் பரிமாறல் நிலையங்கள் 4 ஆகும். அவையாவன,

  • புதிய களனி பாலம் இடைப் பரிமாறல் நிலையம்
  • பேலியகொடை இடைப் பரிமாறல் நிலையம்
  • ஜா-எல இடைப் பரிமாறல் நிலையம்
  • கட்டுநாயக்க இடைப் பரிமாறல் நிலையம்
நிர்மாணப் பணிகள் 2009.08.18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்துக்கு மக்கள் சீனக் குடியரசிடமிருந்து கிடைக்கும் கடனுதவியில் 2013ஆம் ஆண்டின் முதற்பகுதியில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிகள், திட்டமிடல், பொது வசதிகளை மீளமைத்தல் உள்ளடங்கலாகக் கருத்திட்டத்துக்கு அமெரிக்க டொலர் 292 மில்லியன் செலவாகும். அச்செலவில் 248.2 மில்லியன் அமெரிக்க டொலர் மக்கள் சீனக் குடியரசிடமிருந்து கடன் உதவியாகக் கிடைக்கும். எஞ்சிய தொகை உள்நாட்டுப் பணத்தில் செலவிடப்படும்.

நிதியுதவி கிடைக்கும் விதம்

சீனாவின் EXIM வங்கிக் கடனும் உள்நாட்டு நிதியமும்.

கருத்திட்டக் காலம்

39 மாதங்கள்

தற்போதைய நிலை

அதிவேகப் பாதைக்கு சுமார் 40 பாலங்களும் சுமார் 88 சிறிய மதகுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இப்பொழுது சுமார் 27 பாலங்கள் அமைக்கப்படுகின்ற அதேநேரத்தில் சுமார் 50 சிறிய மதகுகளின் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஹுணுபிட்டிய இலங்கை பசளைக் கம்பனிக்கு அருகில் கொங்கிறீட் தூண்களின் மீது மேம்பாலமாக அமைக்கப்படுகின்ற சுமார் 480 மீற்றர்  நீளமுள்ள மேம்பாலத்தை(ஏயைனரஉவ)  இக்கருத்திட்டத்தின் தனித்துவமான நிர்மாணமாக அமையும். அத்துடன், கட்டுநாயக்க சந்தியிலிருந்து விமான நிலையத்திற்குச் சமீபமாக வரைக்கும் அதேவிதமான மேம்பாலப் பாதையொன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேகப் பாதையுடன் இணையக்கூடிய வகையில் பேலியகொட – புத்தளம் (ஏ3) பாதையிலிருந்து கொழும்பு – கண்டி (ஏ1) பாதைக்கும் துடெல்ல – பமுணுகம பாதைக்கும் பிரவேசிக்கும் இரண்டு பாதைகள் முறையே பேலியகொட மற்றும் ஜா-எல இடைப் பரிமாறல் நிலையத்தின் ஊடாக அமைக்கப்படுகிறது. இப்பாதைப் பரப்பை நிரப்புவதற்குக் கடல் மணல் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், தேவையான இடங்களில் வலுவற்ற மண்ணை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.


பாதையை நிரப்பும் பணிகளின் முன்னேற்றம் 62% மாக இருக்கின்ற அதேநேரத்தில், வலுவற்ற மண்ணை வலுப்படுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம்  95% மாகும். மதகுகளையும் பாலங்களையும் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் முறையே 56%, 50% மாகும்.

கருத்திட்டத்தின் மொத்த பௌதிக முன்னேற்றம்  45%மாகும்.

கருத்திட்டத்தின் பயன்கள்

  • கொழும்புக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குமிடையில் துரித போக்குவரத்து முறைமையொன்று உருவாதல்.
  • கொழும்பு பிரதேசத்துக்கு வெளியில் குடியிருப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுதல்.
  • பாரியளவில் உயர்கின்ற போக்குவரத்துத் தேவைகளின் தரம் உயர்வடைதல்.
  • பிரதேசத்தில் அமைந்துள்ள கைத்தொழில்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த பொருட்களை இறக்கும் போக்குவரத்து சேவைகளின் தரம் உயர்வடைதல்.
  • தற்பொழுது பாரியளவில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்ற பேலியகொட – புத்தளம் (ஏ3) பாதையைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு மாற்றுப் பாதையொன்றைப் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல்.

அதிவேகப் பாதைக்கு சுமார் 40 பாலங்களும் சுமார் 88 சிறிய மதகுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இப்பொழுது சுமார் 27 பாலங்கள் அமைக்கப்படுகின்ற அதேநேரத்தில் சுமார் 50 சிறிய மதகுகளின் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஹுணுபிட்டிய இலங்கை பசளைக் கம்பனிக்கு அருகில் கொங்கிறீட் தூண்களின் மீது மேம்பாலமாக அமைக்கப்படுகின்ற சுமார் 480 மீற்றர்  நீளமுள்ள மேம்பாலத்தை(ஏயைனரஉவ)  இக்கருத்திட்டத்தின் தனித்துவமான நிர்மாணமாக அமையும். அத்துடன், கட்டுநாயக்க சந்தியிலிருந்து விமான நிலையத்திற்குச் சமீபமாக வரைக்கும் அதேவிதமான மேம்பாலப் பாதையொன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேகப் பாதையுடன் இணையக்கூடிய வகையில் பேலியகொட – புத்தளம் (ஏ3) பாதையிலிருந்து கொழும்பு – கண்டி (ஏ1) பாதைக்கும் துடெல்ல – பமுணுகம பாதைக்கும் பிரவேசிக்கும் இரண்டு பாதைகள் முறையே பேலியகொட மற்றும் ஜா-எல இடைப் பரிமாறல் நிலையத்தின் ஊடாக அமைக்கப்படுகிறது. இப்பாதைப் பரப்பை நிரப்புவதற்குக் கடல் மணல் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், தேவையான இடங்களில் வலுவற்ற மண்ணை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பாதையை நிரப்பும் பணிகளின் முன்னேற்றம் 62மூ மாக இருக்கின்ற அதேநேரத்தில், வலுவற்ற மண்ணை வலுப்படுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம்  95மூமாகும். மதகுகளையும் பாலங்களையும் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் முறையே 56மூஇ 0மூ மாகும்.
கருத்திட்டத்தின் மொத்த பௌதிக முன்னேற்றம்  45மூமாகும்.
கொழும்பு நகரத்தின் சுற்றுவட்டக் கருத்திட்டம் (OCH)

கருத்திட்டத்தின் பெயர்

கொழும்புக்கு வெளியில் சுற்றுவட்ட நெடுஞ்சாலைகள் கருத்திட்டம்.

கொழும்பு நகரத்தின் சுற்றுவட்டக் கருத்திட்டம் (OCH)

கருத்திட்டத்தின் விபரம்

இலங்கையின் தேசிய நெடுஞ்சாலைகளும் தற்பொழுது அமைக்கப்படுகின்ற அதிவேகப் பாதைகளும் இந்தப் பாதையின் மூலமே இணைக்கப்படுகின்றன. இப்பாதை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் ஆரம்பமாகி தெற்கு அதிவேகப் பாதையில் முடிவடைகிறது. இப்பாதையின் நீளம் 29.1 கி.மீ. ஆகும்.(-600102810500) பின்வருமாறு 03 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கட்டம் 1 - தென்பகுதி கொட்டாவையிலிருந்து கடுவெல வரை கி.மீ. 11.0
கட்டம் 2
- வடக்குப் பகுதி 1 – கடுவெலவிலிருந்து கடவத்தை வரை – கி.மீ. 8.9
கட்டம் 3
- வடக்குப் பகுதி 11 – கடவத்தையிலிருந்து கெரவலபிட்டிய வரை –கி.மீ. 9.2
இப்பாதையைத் திட்டமிடல், காணிகளை சுவீகரித்தல் போன்ற பணிகள் நிர்மாணக் கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

Cost

தெற்குப் பகுதி (SS)

- Rs. 27 Billion (Including LA)
வடக்குப் பகுதி I (NS I) - Rs. 46.5 Billion (Including LA)
வடக்குப் பகுதி II (NS II) - Rs. 38 Billion (Including LA)

நிதியத்தின் தோற்றுவாய்

தெற்குப் பகுதியும் வடக்குப் பகுதியும் 1     -    ஜப்பான் ஒத்துழைப்புச் சர்வதேச நிதியம்
வடக்குப் பகுதி 11    -    சீன எக்சிம் வங்கி

கருத்திட்டத்தின் கால எல்லை

தெற்குப் பகுதி - 42 மாதங்கள்
வடக்குப் பகுதி I - 36 மாதங்கள்
வடக்குப் பகுதி II - 36 மாதங்கள்

தற்போதைய முன்னேற்றம்

தெற்குப் பகுதி - நிர்மாணம் 2009 டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், நிர்மாணம்   30% பூர்த்தியடைந்துள்ளது.
வடக்குப் பகுதி I - காணிகளைச் சுவீகரிக்கும் பணிகள் முடிவடைந்து கொண்டிருக்கின்றன.
வடக்குப் பகுதி  II - காணிகளைச் சுவீகரிக்கும் மற்றும் நிர்மாணிக்கும் பணிகளுக்கான அடிப்படைப் பணிகள் நடைபெறுகின்றன.

பயன்கள்

  • உத்தேச பரிமாற்றல் திருப்புமுனைகள் சார்ந்ததாகத் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் நிலையங்கள் இப்பாதையின் மூலம் இணைக்கப்படுவதால் பிராந்தியத்தின் அபிவிருத்தி ஊக்குவிக்கப்படும்.
  • தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி நிலையங்களுக்கிடையில் குறுகிய தூர பிரயாணத்தை விரைவுபடுத்தல்.
  • பாதை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் மற்றும் அதன் மூலம் பிரயாண நேரம் குறைவதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுதல்.
  • 06 பரிமாற்றல் நிலையங்களைச் சுற்றி நிகழ்கின்ற அபிவிருத்தியின் விளைவாக அதைச் சார்ந்த சொத்துக்களின் பெறுமதி உயர்தல்.
  • வாகன நெரிசல் காரணமாக ஏற்படுகின்ற சூழல் மாசடைதலைக் குறைத்துக் கொள்தல் மற்றும் வாகன ஓட்டச் செலவைக் குறைத்தல்.

வட கிழக்கு (கொழும்பு கண்டி) அதிவேகப்பாதை கருத்திட்டம் (CKH)

அறிமுகம்

உத்தேச வடக்கு – கிழக்கு (கொழும்பு – கண்டி) அதிவேகப்பாதை உத்தேச வெளிச் சுற்றுவட்டப் பாதையின் நுழைவாக இருக்கின்ற மற்றும் தற்பொழுது இருக்கும் கொழும்பு – கண்டி பாதையில் (யு1)  கடவத்தை நகர எல்லையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அது கட்டுகஸ்தொட்ட – குரநாகல் - புத்தளம் பாதைக்காக (யூ)   ஹேதெனிய பிரதேசத்திலும் கண்டி – யாழ்ப்பாணப் பாதைக்காக (யு9)  கட்டுகஸ்தோட்டையிலும் பிரவேசிக்க வழியேற்படுத்துகிறது. இந்த அதிவேகப் பாதை 99 கி.மீ. கொண்டுள்ள அதேநேரத்தில் முதற்கட்டத்தின் கீழ் கடவத்தையிலிருந்து அம்பேபுஸ்ஸவிற்கும் இரண்டாவது கட்டம் அம்பேபுஸ்ஸவிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கும் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டள்ளது.

உத்தேச பாதையின் நிர்மாணத்தின் முதல் 25 கி.மீ. பகுதி வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் பிரதேசத்தின் ஊடாகச் செல்லவிருக்கிறது. அப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு மே மாதம் கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இம்முதற் பகுதியில் தேவையான பிரதேசங்களுக்கு தூண்கள் மீது அமைக்கப்படும் பாதை முன்மொழியப்பட்டுள்ள அதேநேரத்தில் அதன் ஆரம்ப நீளம் சுமார் 9 கி.மீ. ஆகும்.

பிரதான துணைப்பாகம்

கட்டம் 1 - கடவத்த - அம்பேபுஸ்ஸ
நீளம் - கி.மீ.  48.2
ஓட்டப்பாதை நிரல்கள் - 04 (இன்னும் இரண்டு ஓட்டப்பாதை நிரல்களுக்கான இடவசதியுடன்)
இடைப் பரிமாறல் நிலையங்கள் - கடவத்தை, கம்பஹா, பலபோவ, அம்பேபுஸ்ஸ
உத்தேச ஓட்ட வேகம் - மணித்தியாலத்திற்கு கி.மீ. 100
கட்டம் 2 - அம்பேபுஸ்ஸ – கட்டுகஸ்தோட்டை
நீளம் - கி.மீ. 50.7
ஓட்டப்பாதை நிரல்கள் - 04
இடைப் பரிமாறல் நிலையங்கள் - அம்பேபுஸ்ஸ, தேவாலகம, றம்புகன, ஹத்தரலியத்த, ஹேதெனிய, கட்டுகஸ்தோட்டை
உத்தேச ஓட்ட வேகம் - மணிக்கு கி.மீ. 80

நோக்கம்

  • மாற்றுப் பாதையொன்றைத் திறப்பதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களில் மலைப் பிரதேசங்களையும் கைத்தொழில் பிரதேசங்களையும் திறந்துவிடல்.
  • உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்புக்குரிய தென்னிலங்கை அதிவேகப்பாதை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் வெளிச் சுற்றுவட்டப் பாதை என்பவற்றுடன் குறித்த பிரதேசங்களை இணைப்பதன் மூலம் அம்மக்களுக்கு நாட்டில் விரைவான போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொடுத்தல்.
  • பொருளாதார, கைத்தொழில்,  விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
  • ஓட்ட வேகத்தை அதிகரித்தல்.
  • கொழும்பு – கண்டி பிரதான பாதையில் தற்பொழுது நிலவும் வாகன நெரிசலைக் குறைத்தல்.

புதியநிலைமை

சாத்தியக்கூற்று ஆய்வு 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டதோடு உத்தேச பாதைக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1ஆம் கட்டத்திற்காக அடிப்படை அளவை வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 2ஆம் கட்டத்தின் அடிப்படை அளவை வேலைகளும் பூர்த்தியடைந்து கொண்டிருக்கின்றன. 1ஆம் கட்டத்தின் 33 கி.மீ. ஆரம்பப் பணிகளுக்காக ஆரம்பத் திட்டம் பூர்த்திசெய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் விரிவான பொறியியலாளர் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

1ஆம் கட்டத்திற்கான மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காணிச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் அளவை வேலைகள் பூர்த்தியடைந்துள்ள அதேநேரத்தில் கடவத்தையிலிருந்து செல்லும் 33 கி.மீ. பகுதிக்கான இறுதி நிர்மாணத் திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

1ஆம் கட்டத்திற்கான நீரியல் ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டுள்ள  அதேநேரத்தில் நிலத்தின் ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. முதல் 10 கி.மீ. இன் நில ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே பூர்த்தியடைந்துள்ளன.

கருத்திட்டத்தைச் செயற்படுத்துதல்

1ஆம் கட்டத்திற்கான தற்காலிக செலவு ரூ 70 மில்லியனாகும். 2ஆம் கட்டத்திற்கான செலவு ரூ 90 பில்லியனாகும். 1ஆம் கட்டத்தின் அல்லது அதன் ஒரு பகுதியின் ஒப்பந்த வேலைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு நிதியுதவி அல்லது முதலீட்டாளர் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிலர் கவனம் செலுத்தியிருப்பதால் எதிர்காலத்தில் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

பயன்கள்

  • இம்மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய மாகாணங்களுக்கு வதிவிட மற்றும் கைத்தொழில் குடியேற்றங்கள் விரிவாக்கப்படுகின்றன.
  • கைத்தொழில், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்கள் திறந்துவிடப்படுதல்.
  • சுற்றுலாக் கைத்தொழிலும் ஏனைய முதலீடுகளிலும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிது என்ன

left direction
right direction