Ministry of Higher Education & Highways

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

நோக்கு

புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் மிக்க பாதுகாப்பான வலையமைப்பினை உருவாக்குவதன் மூலம் சிறந்த சேவை வழங்குனராகவிருத்தல்.

இலக்கு

நாட்டுப் பிரஜைகளின் தேவைப்பாடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கிணங்க நிபுணத்துவ அறிவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் தகுந்த முறையில் வளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நெடுஞ்சாலை வலையமைப்பினை அபிவிருத்தி செய்தல், முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல்.

நோக்கங்கள்

  • தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு நெடுஞ்சாலை துறைக்கு தேசிய கொள்கைகளை உருவாக்குதல்.
  • நகரங்களுக்கிடையில் உயர்ந்த போக்குவரத்து வசதியை வழங்குதல், பொருளாதார நிலையங்களுக்கிடையில் வினைத்திறனான தொடர்பினை ஏற்படுத்தல் மற்றும் கிராமப்புற பிரதேசங்களுக்கான அணுகுகையினை மேம்படுத்தல்.
  • நிலைத்தகு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கு மிகச்சிறந்த தரங்களில் வீதி வலையமைப்பினை பராமரித்தல்.
  • வினைத்திறனான போக்குவரத்து முகாமைத்துவத்திற்கு புத்திசாதுரியமான போக்குவரத்து முறைமையை (ITS) வழங்குதல்.
  • உயர்ந்த சேவை மற்றும் வீதிப் பாவனையாளர்களுக்கு சௌகரியமான வீதிகள் போன்றவை வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு வீதித் துறையில் கொள்ளளவுகளை உயர்த்தும் பொருட்டு முதலீடு செய்தல்.
  • வீதித் துறையின் மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் முதலீடு செய்தல்.
  • வீதிப் பாவனையாளர்களின் பொருட்டு வீதிப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துதல்.

பணிகளும் கடமைகளும்

  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள திணைக்களங்கள் மற்றும் சட்ட நிறுவனங்களின் கீழ்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் கடுகதிப்பாதைகளின் விடயங்கள் தொடர்பாக  கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல்.
    • வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதன்மூலம் நிர்வகிக்கப்படுகின்ற கம்பனிகள், சார்ந்த கம்பனிகள்
    • வீதி பராமரிப்பு நம்பிக்கை நிதியம்
  • குறித்த நோக்கங்களை அடையும் பொருட்டு தேசிய திட்டமிடல் அதிகாரிகளுடன் உடன்பாட்டுக்கு வந்த காலவரையறைக்குள் வரவுசெலவுத்திட்ட வளங்களுக்குள் குறித்த கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை செயற்படுத்துதலும் நடாத்துதலும்.
  • அமைச்சின் விடயப்பரப்புக்குள் வருகின்ற பொதுமக்கள் சேவைகளை வினைத்திறன்மிக்க வகையிலும் மக்களுக்கு சாதகமாகவும் பெற்றுக்கொடுத்தல்.
  • ஊழலையும் வீண் விரயத்தையும் ஒழித்து அமைச்சின் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் நவீன முகாமைத்துவ உத்திகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அனைத்து செயல்முறைகளையும் விதிமுறைகளையும் புனரமைத்தல்.
  • உயர்ந்த தரத்திலான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய பிரதான பாதைகளைக் கொண்ட பாதை வலையமைப்பொன்றை வழங்குதல் மற்றும் மிகச் சிறந்த நிலையில் பேணுதல்.
  • மக நெகும கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
  • தேசிய கொள்கை தொடர்பாக ஒன்றிணைந்த அபிவிருத்திக்கான வீதிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து முகவர் நிலையங்களுக்குமிடையில் தெளிவான ஒருங்கிணைப்புச் செயற்பாடொன்றை மேம்படுத்துதல் மற்றும் வீதிப் பாவனையாளர் கட்டணங்கள் சேகரித்தலை மேற்பார்வை செய்தல்.
  • மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய வீதிகள் தொடர்பாக தேசியக் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் தயாரித்தல் மற்றும் அந்நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நடாத்துதல்.
  • கொட்டாவ, கடுவெல மற்றும் கடவத்தை ஆகிய நகரங்களின் கருத்திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்திப் பணிகள்.

 

Last Updated on Tuesday, 02 August 2016 07:16  

புதிது என்ன

left direction
right direction